சிரித்தபடி


© ம. ரமேஷ் சென்ரியு கவிதைகள்

தொப்புள் கொடியிலிருந்து
மாலையில் பிரிக்கப்படுகின்றது
தேசியக் கொடி

குறவர்கள் கடைபிடிக்கிறார்கள்
ஜீவகாருண்யம்
பரமக்குடி துப்பாக்கிச்சூடு

ஊடகங்களால்
வளர்ந்து செல்கிறது
மூடநம்பிக்கை

பயப்பட வேண்டியிருக்கிறது
கடவுளுக்கு அல்ல
அரசியல்வாதிகளுக்கு

காந்தி தாத்தா
சிரித்தபடி
கள்ள நோட்டு

எழுதியவர் : ம. ரமேஷ் (17-Oct-11, 2:21 pm)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 360

மேலே