தாமரை

கலைந்து விரிந்த அவள் கூந்தல்
கடலலையாய் என் நெஞ்சை வருடும்
முட்டை கண்ணால் முழித்து பார்க்க
முழுமதியோ இவள் முகமென ஏங்கும்
கிளிச் சொண்டாய் இவள் மூக்கு
கிழித்தது என் பழுத்த நெஞ்சை
பெண்ணா இல்லை பேரழகியா
பெயர் சொல்ல மனம் ஏங்கும்
கொலுசாய் இவள் சிரிப்பால்
கொத்தினாள் அலைக்கடலை
கோதினாள் விரல் நுனியால்
கோவங்கள் தணிந்தே போக
தவங்கள் புரிந்தேன் நானே
தவறுகள் தேடி போக
தவறுகள் புரிந்தேன் நானே
தாமரை தேடி வந்தது.

எழுதியவர் : நிழல்தாசன் (22-Mar-24, 3:35 pm)
சேர்த்தது : நிழல்தாசன்
Tanglish : thamarai
பார்வை : 56

மேலே