வட்டமுகம் தொட்டு வருடுகிறதே நெஞ்சை

பட்டாடை யில்வந்தாள் பொற்பாவை ஆலயம்
தட்டினில் பூவும் தவழ்ந்திடும் புன்னகையில்
தொட்டு வருடுகிற தேநெஞ்சை என்செய்வேன்
வட்டவான் வெண்ணிலாசொல் வாய்

----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

சற்று மாற்றி ------

பட்டாடை யில்வந்தாள் பொற்பாவை மாலையில்
கட்டிய சேலை பளபளக்க -- வட்டமுகம்
தொட்டு வருடுகிற தேநெஞ்சை என்செய்வேன்
வட்டவான் வெண்ணிலாசொல் வாய்

-----நேரிசை வெண்பா
ப பொ த த தொ தே வ வா --- 1 3 ஆம் சீரில் மோனை

பட்டாடை யில்வந்தாள் , வருடுகிற தேநெஞ்சை ----வகையுளி

எழுதியவர் : கவின் சாரலன் (30-Mar-24, 6:20 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே