தூக்கம் தொலைத்த கண்கள் பூத்த உன் கணவன் எழுதிய சில வரிகள் = 3

என் உயிர் இருந்தாலும் உனக்கு பயனில்லை

என் உயிர் பிரிந்தாலும் உனக்கு பயமில்லை ( அன்பு))


போன பிறகு
தேவையில்லைடி புலம்பல்
என்னை புதைப்பதால் உனக்கும் கிடைக்காது சாம்பல்
முல்லை போல் தைத்து கொண்டே
இருக்கிறாய் மனதினில்
நவீன காலத்தில்
மோட்டார் தையல் மிஷினை போல் தைத்து கொண்டிருக்கிறாய்
அதிவேகமாய்

சிறு சிறு துணைகளால்
ரணகளம் ஆகுதே
ரத்தக்காலமாய் மாறிக் கொண்டிருக்கிறது

மனதிற்குள்.


மூச்சு மூச்சு முட்டி கொண்ட நாட்களை மறந்தாயோ

புத்தகங்கள் போல் ஒட்டிக்கொண்ட பக்கங்களை மறந்தாயோ

நூலகத்திற்கு உள்ளே நூல்களைப் படைத்தோமே

நூலால் படைத்த ஆடைகளை கலைத்தோமே

உன் சொல் என் சொல்
என் உயிர் சொல்

முழு தேய்பிறையில் சென்றவளே
வளர்பிறையும் தொடங்கியும் வராமலே இருப்பவளே

காற்று ( உந்தன் நினைவுகள் )
மட்டும் இல்லை என்றால்
நீ காண முடியாது இந்த உன் இந்த உறவை


மு. கா. ஷாபி அக்தர்

எழுதியவர் : மு. கா. ஷாபி அக்தர் (21-Apr-24, 9:38 am)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
பார்வை : 78

மேலே