எழிலவள்
எளிதென நினைத்து
கவிதனை வரைந்தேன் /
எழிலவள் விழிதனை
வர்ணிக்க முயற்றேன்/
கனிவாகச் சிரித்தவள்
புளியென முகம் சுழித்தாள்/
மரவு வார்த்தையில்
மறைவாக பொருள்/
கூறுவாயோ என
வினா தொடுத்தாள் /
தடுமாறிப் போனது
படுபாவியென் மனம் /
காரணம் தான் என்ன
மரவறியா மகா கவி நான்/