நா.முத்துகுமார் நினைவு தின கவிதை

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

*நா.முத்துகுமார்*
*நினைவு தினக் கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

"கவிதைக்கு
பொய்யழகு" என்ற
பெரிய தத்துவத்தையே !
உனது கவிதைகள்
தகர்த்தெறிந்து விட்டது....

மை நிரப்பிய பேனாவால்
கவிதை எழுதாமல்
நீ உண்'மை'யை
நிரப்பி எழுதினாய்....

எழுதி வாழ்ந்தார்கள்
நீ எழுதியதால்
வாழ்கிறாய்.....

உன்னைப் போலவே
உன்னுடைய
பாடலும்
கவிதையும்
எளிமையாகவே
உலா வந்தது....

நீ அதிகம் எழுதவில்லை
அதனால் தான் என்னவோ
உன்னை பற்றி
அதிகம் பேசப்படுகிறது.....

உன்னுடைய
பாடல்கள் எல்லாம்
கற்பனையில் இருந்து
கர்ப்பம் அடையவில்லை....
உன் கடந்தகால
அனுபவத்திலிருந்து
கருவுற்றது.....

பட்டாம்பூச்சி
பதிப்பகம் தொடங்கி
பட்டாம்பூச்சி
விற்பனை செய்தாய்...
நீ விற்ற
பட்டாம்பூச்சி
மலரில் இருந்து
தேனை எடுக்காமல்
மலரையே
எடுத்துச் சென்று விட்டது.....

உனது பாட்டு
பார்த்து பார்த்து
நெய்த எடுத்த பட்டு....

உன்னுடைய
பாடலின்
ஒவ்வொரு வரி
நெஞ்சத்தில்
தீபம் ஏற்றும் திரி.....

எங்களோடு
பேச உன்னுடைய ' நா '
இல்லாமல் போனாலும்
உன் பெயரில் உள்ள ' நா '
எங்களோடு
பேசிக்கொண்டு தான்
இருக்கிறது....

மருந்தில்லா நோயில்
உனக்கு விருந்து வைத்து
எமன்
உன்னை
அழைத்துக் கொண்டது
அவனுடைய சபையில்
கவிஞராக்கிக்
கொள்ளத் தானே...?

உன் கவிதையில்
மயங்காதவன்
எவன் உண்டு ?
எமன் தப்பிக்க...

எமனுக்கும்
ஒரு நாள்
மரணம் வந்தாலும்
எழுத்தாளனுக்கு ஒருநாளும்
மரணமே இல்லை
போய் வா.....

உன்னுடைய
நினைவு நாளில் மட்டும் அல்ல
உன்னை
நினைக்காத நாளே இல்லை...!
ஆம்....!
உன் பாடல்
எங்கேனும்
ஏதேனும் ஒரு இடங்களில்
ஔிக்காத நாள் உண்டா....?

வாழ்க உன் புகழ் !
வளர்க உன் பெருமை !

*கவிதை ரசிகன்*

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

எழுதியவர் : கவிதை ரசிகன் (14-Aug-24, 8:17 pm)
பார்வை : 25

மேலே