காற்றுக்கும் காது உண்டு - 2

காற்றுக்கு எடையுமுண்டு
உரைத்தது ஊதுபை(பலூன்)

காற்றுக்கு விலையுமுண்டு
உணர்த்தியது உயிர்க்காற்று

காற்றுக்கு இசையுமுண்டு
கரைத்தது கான புல்லாங்குழல்

காற்றுக்கு காதலுமுண்டு
சொன்னது கைத்தட்டிடும் இலைகள்

காற்றுக்கு கோபம்வருவதுண்டு
கண்டது நாம் கடும்புயலாய்

இருசெவியும் உண்டென்று
இயம்பியது இருபத்தொராம் நூற்றாண்டு

உள்ளரங்கில் உளறினாலும் - சமூக
ஊடகங்கள் ஊருக்கு எடுத்துரைக்கும்.

உறவுவழி சண்டையென்றாலும் - ஊடகம்
ஊர்கூடி பஞ்சாயத்து வைக்கும்.

ஊழல் பெருந்தலைகளின்
உண்மைமுகம் போட்டு உடைக்கும்

காதுகொண்டு காற்று கேட்டதில்
கால்வாசி உண்மை மட்டும்.
கட்டுக்கதை புரளியெல்லாம்
காததூரம் சென்று பேசும்.

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (30-Aug-24, 8:27 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 36

மேலே