என் அறம் எதுவெனில் - 3

செல்லுயிர் கொடுத்தேனும்
செங்கோல் நிமிர்த்துவது
செவ்வேந்தர் அறம்!

நல்லவை செய்தலும்
அல்லவை கடிதலும்
செழுமை மாந்தர் அறம்!

அழுக்காறு, அவா
வெகுளி, இன்னாச்சொல்
அகற்றுவது ஆன்றோர் அறம்!

அன்ன சத்திரம்
ஆயிரம் வைத்தல்
அடிவயிற்றுப்பசி போக்கிடும் அறம்!

அங்கோர் ஏழைக்கு
அறிவுத்தந்து எழுத்தறிவித்தல்
அறிவோர் ஆற்றும் அறம்!

ஆயிரமாயிரம் அன்னைத்தமிழும்
அமுதென கொடுத்தது
அறமெது? என கேட்டோருக்கு

அத்தனையும் பயின்றபின்னும்
அடிநெஞ்சில் வெட்டியது மின்னலொன்று
அறமென எதைநானும் பற்றுவதென?

கொடுத்து வாழ்வதிட
கொற்றவன் நானில்லை
கொடையும் குடும்பசூழல் ஏற்பதில்லை

கெடுத்து வாழாமல்
கேளிக்கை கொண்டால்போதும்
வாழ்ந்திடும் வாழ்வில் யாவும் நலமாகும்

தெளிந்தேன் என்அறம் இதுவென்று

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (4-Sep-24, 9:13 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 14

மேலே