உன் கோபத்தால் சாபம் பெற்ற எனக்கு...........



கற்களால் எரிந்த வலியை விட
மிக கொடியதாய் இருந்தது
நீ என்னை தாறுமாறாக திட்டி தீர்த்த போது
உனக்கென்ன ஆனது,

நேற்று வரை சுகமான காற்றலையாய்
குருன் செய்திகளை அனுப்பி விட்டு
இன்று வெறிச்சோடிய பார்வைகளாலும்
வெப்பத்தை விட சூடான முக பாவனைகளையும்
காட்டி செல்ல என்ன காரணம்
உனக்கென்ன ஆனது,

என் கை பேசியில் எப்போதும் உன்
அழைப்பை மட்டுமே எதிர்பார்த்து கொண்டிருப்பேன்
ஆனால் இப்போது உன் அழைப்பின்றி
மௌனமாய் கிடக்கிறோம்
நானும் என் கைபேசியும்
உனக்கென்ன ஆனது,

என் வேதனைகளையும்
சுகங்களாக மாற்றிய உன் அன்பு மொழிகள்
இப்போது என்ன ஆனது
உன்னால் என் மூச்சை அடக்கிவிட
காற்றோடு அலைகிறேன்
நீ என்னை ஏமாற்றிய காரணத்துக்கு
விடைதேடி,

உன் கோபத்தால் சாபம் பெற்ற எனக்கு
நரகாமாய் இந்த பூமியில் வாழ்க்கை
ஆனந்தமான புன்னகையுடன்
வேறு ஒருவனோடு உன் வாழ்க்கை

என் காதலுக்கு விஷம் வைத்து விட்டு
மறைந்திருந்து வேடிக்கை பார்க்கிறாய்
நீ வைத்த காதல் விஷத்தை தின்றுவிட்டு போராடுகிறேன்
அன்பே இன்றும் என் காதலுக்காக,,,,,,,,,,,,,,,,

இப்படிக்கு.....................உன்னவன்

எழுதியவர் : நந்தி (21-Oct-11, 10:31 am)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 520

மேலே