ஹரிவராசனம் மெட்டு

சரணம் அன்னையே என்று பாடுவேன்
தருணம் எம்மைக் காக்க தாயே நீயருள்
கருணைக் காட்டுவாய் என்மேல் இரக்கம் கொண்டென்றும்
வருவாய் வந்தருள் தருவாய் தெய்வமே.....
கருணை மலர்விழி காட்டியருளம்மா
காலம் முழுதும் எம்மைக் காத்தருளம்மா
கானம் இசைத்து உன்னை பாடி மகிழ்வேன்
கவலையாவும் போக்கியருள் புரிந்தே காத்திடு
மலர்முகம் தன்னில் மஞ்சள் திலகம் இட்டு
மகிழ்வுடனே உன்னை அலங்கரித்திடுவேன்
மங்கள நாயகி நீ மகிழ்ந்து அருளம்மா
மகள் என்னைக் கனிவுடனே காத்தருளம்மா
பவள வாய்மொழி கூறியருளம்மா
பைங்கொடியே பைந்தமிழால் உன்னைப் பாடுவேன்
பாசமுடன் ஓடி நீ வந்தருள் அம்மா
பரிமளமே பண்ணிசைத்தேன் கேட்டு அருளம்மா
அனுதினம் உந்தன் அன்பை எண்ணியே
அகமகிழ்ந்தே நான் போற்றி வாழ்த்துப் பாடுவேன்
அருளைத் தந்தெம்மைக் காத்திடம்மா
அன்புடனே எம்மைக் காக்க வந்திடம்மா
ஆகமங்கள் யாவும் உன்னைப் போற்றியே
ஆனந்தக் கூத்தாடி பண்ணிசைத்திடுதே
ஆனந்த இன்பமய ஜோதி நீயம்மா
ஆறாத் துயரதனைப் போக்கி அருளம்மா
இதய வீணை தன்னில் இன்னிசை மீட்டி
இன்பமுடன் உன்னப் போற்றி வாழ்த்துப் பாடுவேன்
இன்முகத்துடனே நீ கேட்டருளம்மா
இன்னல் யாவும் போக்கிக் காத்தருளம்மா
சகல கலை பயின்றிடவே நீ அருளம்மா
சந்ததமும் உந்தன் புகழ் பாடி மகிழ்வேன்
சரண கமலம் போற்றி வாழ்த்துப் பாடுவேன்
சர்வமுமாய் எனக்கு அமைந்த தாயும் நீயம்மா
சரணம் அன்னையே....... சரணம் அன்னையே..........
சரணம் அன்னையே,,,,,,,,,,,,, சரணம் அன்னையே............
சரணம் அன்னையே ,,,,,,,,,,,,,,, எந்தன்
சரணம் அன்னையே...........................