விதவை முடிகள்... அனாதை ஈறுகள் ...

வயிறு நிறைய
பசி...
விழி நிறைய
கண்ணீர்...
நீட்டியிருந்த கை நிறைய
வெற்றிடம்.
தலை நிறைய
விதவை முடிகள் ..
வேஷ்டி நிறைய
அழுக்கு...

அனாதை ஈறுகள் ..

துணையாய்
ஒற்றை ஊன்றுகோல் ...

அந்த வழியே
வருவோர் போவோரின்
உதடு பிதுக்கல்கள்,
தலையசப்புகள்,
கேவலப்பார்வைகள்,
ஒருசில கண்ணீர்த்துளிகள்,
ஒன்றிரண்டு சில்லரைகள் .

அந்த வாடிக்கை
வாழ்க்கையில் ,

புதிதாய் அவ்வழியே
வந்த தன் மகன்.

அவனுக்கு
இழுக்கு என
வழுக்கை தலையுடன்
இடம்பெயர்ந்தார்
அந்த பிச்சைக்காரத்
தந்தை.

-எபி

எழுதியவர் : எபி (7-Nov-11, 12:13 am)
பார்வை : 297

மேலே