கவிதையாகிப்போன காதலி

உன் கவிதையழகின் கவர்ச்சியினால்,
என் கற்பனையில் உறைந்துகிடக்கும்,

உன் முகத்தினழகும், குரலழகும்,
மாறித்தான் போய்விட்டிருக்கின்றன.

தாமரையும் குயிலும்கூட அதனதன்
தன்மையினில் மழுங்கிவிட்டிருக்கின்றன.

மறுமுறையும் உன்னையும் குரலையும்
பதிவுசெய்யத் துடிக்கிறது மனசு.

உன்பால் கொண்டிருந்த அன்பால், உன்னுருவம்
ஒளிந்துகிடக்கின்றது மூளையின் ஓர் மூலையில்.

முடிவில் தூசுதட்டிச் சிந்திக்கையில்
முடிந்துவைத்த கவிதை முன்வந்து நின்றது.

ஆணின் நட்பு உச்சம்மாய் காற்றும்,
பெண்ணின் நட்புச்சமாய் மேகமும்

பாவிக்கிடக்கின்றன வான்வெளியில்,
சுதந்திரமாய் ஒட்டி உறவாடிக்கொண்டே.

கதிரவன் உதவிகொண்டு நீர் சேர்த்து
காற்று, மேகம் மேவிக் கார்மேகமாய் மாற்றம்.

கார்மேகமே, காதலின் உருவமாய்
கணமழையைக் கொட்டித் தீர்க்கும்,

கவிதையழகில் கண்ணசைக்கும் கண்மணியே.
கணமழையின் காதல்ரசம் காட்டி வரமாட்டாயோ?

எழுதியவர் : thee (10-Nov-11, 11:45 am)
பார்வை : 235

மேலே