வாழ்த்த மட்டுமே தெரியும் காதலுக்கு..!
எனை விட்டு பிரிந்த தருணம்
வார்த்தைகளும் விடுப்பு
வாங்கி கொண்டதே..
கவிதையாகி அர்ச்சித்த
உன் வார்த்தைகள்
ஆயுதமாகி எனை
பொசுக்கியதேன்
மணிக்கணக்காய் உனக்கென
காத்திருந்த பாதையெல்லாம்
மயானக்காடாய் மாறியதேன்..
தோல்விதான் காதலின் வேதமா
தோற்கடிக்கதான் நீ வந்த நோக்கமா.. .
சரிவராது என்ற என் வாதத்தை
வென்றது எல்லாம் இன்று
என்னை சரிய வைக்க தானா..
உன்னதமான காதலை
சிதைத்து விட்டு
வாழ்வில் எதைத் தேட
இன்னொரு துணை
தேடிக் கொண்டாய்..
உண்மையைக் கொன்றுவிட்டு
ஒன்றுமில்லா உள்ளத்தோடு
கரை கடந்தவனே....
உன்னை வாழ்த்துவது தவிர
என் காதல் வேறொன்றும்
சொல்லித்தரவில்லை.......