சுதந்திரக்காதல்
நீ ஒரு நிலவு
நான் மழைத்துளி
ஆதலில் நான்
உன்னை தொட்டு விட்டு
வந்து விடுகிறேன் ...
ஒரு காதல் போதலில்
மறுகாதால் துளிவிடும்
ஆதலில் தான்
காதல் செய்வீர் ..
சட்டென்று போதையில்
முழ்கிச்சென்ற
நிரந்தரம் இல்ல பிரிவு போல
காற்றினால் சுவாசம் எடுத்து
மனதில் போறை உண்டெங்கில்
புகுந்து விடும் மறு காதல்
நேற்று
இன்று
நாளை
மாறிப்போன மொத்தவடிவின்
காத்திருக்கும் நேரமும்
வார்த்தைகளால் சொல்வதை விட
மனத்தின் தூண்டலினால்
பொருள் உரைக்கும்
"காலத்தின் வேகமும் நடைமுறையும் "
ஜனனம் மரணம்
ஆசை உணர்வுகள்
மனதிற்குள் யுத்தம் செய்யும்
நாடி நரம்பினை ஒடுக்கி
"குருதி கசியாது "
" ருசிகரமானது "
வித்தியாசமான குத்துச் சண்டை
ஓடும் புகைவண்டியின் பதை மாற்றம்
தடங்கல் இல்லா
இனிய பயணத்தின் முடிவு போல
நானும் என்னை தொடர்ந்த
மறு நிழலை நோக்கி நடந்தது
மறு கதையின் இனிய
திருப்பங்களில் சுதந்திரமாக ..
அமரிக்காவில் -வெள்ளையனும்
ஆபிரிக்காவில் -கறுப்பனும்
இலங்கையில் - மாநிறத்தவன்
காதல் பரிமாற்றங்களின்
தெளிந்த நிரோட்டத்தில்
வெள்ளையன் -சுதந்திரச்சிலையை
கறுபபன் -நெல்சன் மண்டேலாவை
யாழ்ப்பாணத்தவன் - புலிக்கொடியை
என சுதந்திரக்காதலை சொல்ல ...
அவற்றுள் நானும் எனக்கென்று
கட்டிய நதியின் முடிவின் ஆழத்தில்
நான் புதைந்த இடத்தை தேடி
அமைதியான சலனம் இல்லாத
நீரோட்டத்தில் பயணிக்கிறேன்
என் காதலுடன்
எத்தகைய நிறம் சேர்த்து
எப்படி என் காதல் செய்தேன்
நினைக்கையில் முடிகிறது
திருப்பங்கள் தருகிறது!!!