கண்மணி அவள் பெண்மணி
அவள் ....
அவள் நான் மாலையிட்ட
மங்கை அல்ல ....
என்னை காதலித்த பாவை...
தேடி போனேன் பூமகள் இல்லை ...
என்னை தேடி வந்த தேவதை
இவள்...
எச்சங்கள் பாராமல் இச்சங்கள்
பல தந்தாள்...
காதல் தாகத்தில் இருந்த
என்னை....
தாகம் தீர்த்தாள்....
அவள் இதழ்களால் ....
மங்கையாக ஆகாமலே மழலையை
பெற்று தந்தாள் ....
என் கைகளில் பாவையாகவே.....
என் மங்கையாக இல்லாமலே
பாவையாக ....
மரணத்தை முத்தமிட்டாள்....
எம் மங்கையாகவே தீமூட்டினேன் ....
அவள் காதலி அல்ல ...
எம் மங்கை அவள்......