உயிர்த் தமிழே!

என் மனத்தளத்தில் சிறை பட்ட அழகே!....
மனதுக்குள் மனதாய் உலவுகின்ற திரு உருவே!...
"கருமை சிறைக்குள் அடைபட்டேன்" .....சில நாள்
கண்ட சித்ரவதை போதும்!..போதும்!...
உறைக்குள் அடைபட்ட சொற்களாய் -நீ
உச்சரிக்கவே காத்துக்கிடக்கிறேன்!!....
"உனக்காய் என் காலமெல்லாம் வாழ்வேன்"-அன்றி
ஒரு நொடி கனமெனும் உன் உருவம்
கண்ட பின்தான் மாய்வேன் !!....தாயே !...
உன் தரிசனம் கண்டால் தான்
என் "சவத்திற்கு ஊர்வலம்" இல்லையேல்!!?...
சனனிக்கும் ஒவ்வோர்பொழுதும்
"உயிர்த்தமிழே" உனைத் தேடுமே என் உளம்!!....

எழுதியவர் : வைகை அழகரசு (23-Nov-11, 8:08 pm)
பார்வை : 336

மேலே