காதலை காவு வாங்கி போனவனே ..!

உணர்வோடு கலந்து விட்ட
உன் உருவம்
உயிருக்குள் கலந்திடத்தான் மனசு ஏங்குதடா..

நீ வந்த திசையெல்லாம் எட்டி பார்த்தே இன்னும் என் மனசு அங்கு தான் நிக்குதடா..

சரியாய் அடைக்காத தண்ணீர்க் குழாயாட்டம் உன் நெனப்பு நெஞ்சுக்குள்ள சொட்டுதடா..

நீ காட்டிய அன்பு தான்
நெருப்பாய் எரிக்க பாக்குதடா
உன் நிலம் தேடியே
என் ஜீவன் பறக்க நினைக்குதடா...

உயிராய் நினைத்ததை
ஓலையில் சொன்ன உனக்கு
வேளை வரவில்லையே
எனை விட்டுப்போகும் செய்தி சொல்ல.. ..

மரணம் வந்தாலும் உடனிருப்பேன் என்றவனே நான் மண வாழ்க்கை கேட்டதற்கா
மலைத்து நின்றாய்..

காதல் தான் நீ ஆட
கிடச்ச கண்ணாமூச்சி,,
அது காவு வாங்கி போச்சுதடா
என் உள் மூச்சு.. .

எழுதியவர் : kavithaayini (27-Nov-11, 7:58 pm)
பார்வை : 368

மேலே