சுய பச்சாதாபம்....

உடலும் கனமாக உள்ளது
மனமும் கனமாக உள்ளது
சலிப்புகள்
வெறுப்புகள்
சந்தேகங்கள்
பொறாமைகள்
விரக்திகள்......

சுய பச்சாதாப
கண்ணீரால் கண்களை
கசக்குவதற்கு பதிலாய்

மண்ணில் பிறந்திட்டோம்
மானிடராய் வாழ்கின்றோம்
மண்ணில் சிதைவதற்கு முன்
மணமான மலர்ச்சியான
வாழ்கையை படைப்போம் என
மன உறுதியுடன்
மராத்தான் ஓட்டத்தை
தொடர்வோமா?????

எழுதியவர் : kirupaganesh, nanganallur (2-Dec-11, 10:58 am)
பார்வை : 384

மேலே