கூடு


வெட்டப்பட்ட மரத்தில்
சிதைந்த கூட்டைப்பற்றி
கவிதை எழுதி
முடிப்பதற்குள்..

வீழ்ந்த மரத்தின்
குச்சிகளை கொண்டே
கட்டியது மற்றொரு கூட்டை..
காக்கை.

எழுதியவர் : கீர்தி (2-Dec-11, 11:07 am)
Tanglish : koodu
பார்வை : 310

மேலே