சுட்டிகாட்டி ..மகிழ
மாமரத்து குயில் ஓசை ,
மஞ்சு விரட்டிய மைதானம் ,
மலர் தேடும் வண்டு ,
ஊஞ்சல் ஆடி விழுந்த ,
ஆலமரத்தடி ..
ஒரே ஒரு முறை ,
ஊருக்குள் வந்து போகும் ஒற்றை பேருந்து ,
குளிக்க பயந்து ,
குதித்தோடிய குட்டித் திண்ணை ,
திருவிழா கூடத்தில் தொலைத்த பகைமை ,
தினம் தினம் ..
நீச்சல் பழகிய ஆழ்கிணறு ,
ஆற்றங்கரை இல் ஆக்கிய ,
கூட்டான் சோறு ..
ஆயாவின் சுருக்குப்பை ,
இப்படி எதுவும் இந்த பட்டினத்தில் இல்லை ,
உன்னிடம் சுட்டிகாட்டி ..மகிழ .
சசிகலா