நிலவு

ஏன் இந்த நிலவுப்பெண்

வான் வழியே உலாவுகிறாள்....?

ஓ..!

நட்சத்திர குமாரர்களில்

நன்மணம் புரிவதற்கு

நடை பயின்று வருகிறாளோ....?



யார் எறிந்த வட்ட தட்டிது....?

பார் முழுவதும் பட்டு ஒளிருது

தாராய் வான் கருமை கடலில்

தாரகை நடுவே தகதகக்குது

நிதமும் வாராயோ..? வந்து முழு

நிலவு வதனம் காட்டாயோ...?

எழுதியவர் : பா.நேசவேணி (18-Dec-11, 10:10 pm)
சேர்த்தது : nesaveni (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : nilavu
பார்வை : 321

மேலே