பார்க் பெஞ்சில்

பார்க் பெஞ்சில்
தனிமையில்
அமர்ந்திருந்தேன்
அருகில் ஒரு பெண்
வந்து அமர்ந்தாள்
கையில் புத்தகம்
நாவலா என்றேன்
புதுக் கவிதைகள்
என்றாள்
யார் எழுதியது ?
பெயர் சொன்னாள்
கேளிவியே படவில்லையே
என்றேன்
சந்தித்து விட்டீர்கள்
என்று எழுந்தாள்
மீண்டும் சந்திக்கலாமா
என்றேன்
சிந்திக்கிறேன் என்றாள்
எதற்காக என்றேன்
கவிதைக்காக
என்று சிரித்தாள்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Dec-11, 10:22 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 242

மேலே