புத்தம் புது ஆண்டு 2012 ***** 555
இனிய புத்தாண்டு.....2012 .....
தினந்தோறும் புத்தம்புது
ஆயிரமாயிரம் பூக்கள்...
நித்தம் பல மனிதர்கள்
நம் சந்திப்பில்...
தினந்தோறும் ஆயிரம் ஆயிரம்
வின் மீன்கள் ...
வானில் தினம் ஆயிரமாயிரம்
வர்ணஜாலங்கள்...
நாம் சந்திக்க ஆயிரம்
நொடிகள் வேண்டும் ...
நாம் சிந்திக்க ஒரு நொடி போதும் ...
சிந்திக்கிறேன் நாம் மீண்டும்
சந்திப்போமா?என்று ...
நாம் இனி எப்போது
சந்திக்க போகிறோம் ...
என் நண்பன் வருகிறான் ...
இனி உங்கள் வாழ்வில்
சந்தோசமோ சோகமோ ...
அவனிடம் சொல்லுங்கள்...
அவன் என்னைப்போல் அல்ல ...
நான் உங்களுக்கு கஷ்டங்களும்
சோகங்களும் கொடுத்திருப்பேன் ...
அவன் உங்கள் வாழ்வில்
பலபல அற்புதங்களை
நிகழ்த்துவான் ...
அவன்தான் என் நண்பன் 2012 ...
நான் இனி வரமாட்டேன்...
செல்கிறேன் ...
இப்படிக்கு வருத்ததுடன் 2011 ...