நீ ஞானிதான்..!-பொள்ளாச்சி அபி
நீ ஞானிதான்..
சுயம் அறிந்தவனே ஞானி
என்பது உனது தீர்ப்பு..!
அதை நீ அறிந்திருக்கிறாய்
பிறகென்ன நீ ஞானிதான்..!
சமூகத்தின் மீதுள்ள உனது கோபம்
வார்த்தைகளை சாட்டைகளாய்
மாற்றியிருக்கிறது..!
அவலங்களை மாற்ற வேண்டும்
என்ற ஆதங்கம் தெரிக்கிறது.
எழுத்து என்பது வெறும்
வெறும் கோடுகளல்ல..அது
ஆயதங்கள் என்பதையும்
நீ அறிந்திருக்கிறாய்..!
கவிதைகளை கைவாளாய்
வீசியவரும் உண்டு..!
அதனால் சொந்த அரிப்பை
சொரிந்து கொள்பவருமுண்டு..!
இளைஞனே..உனது ஆர்வம்
என்பது வெளிப்படை..
உன்போல்தான் வேண்டும்
இளைஞர் படை..!
எழுது..எழுது..நீ
அடுத்தவர் மனைதை
உழுது..உழுது..!
விளைவது எல்லாம்
தங்கமாகட்டும்-உனது
ஊரின்பெயர் இன்னொரு
தமிழ் சங்கமாகட்டும்..
வாழ்க..வாழ்க..!