தோழியே உன் வருகைக்காக ...........

தேக்கி வைத்துள்ள கவலைகளையும் !
அடக்கி வைத்துள்ள கண்ணீரையும் !
முற்றும் துடைக்கவும் !
கவலை போக்கவும் !
உன் கைகளை எதிர் நோக்குகிறேன் தோழி .........

உன்னோடு பேசாத வார்த்தைகள்
விழித்திரையில் வழிகிறது வலிகளாய்!
உன்னோடு பேசிய வார்த்தைகள்
ஞாபகத் திரையில் தேங்கி அழுகிறது மௌனங்களாய்!

தவறுதான் நான் இழைத்து விட்டேன்
அதற்க்கு தண்டனையை நீ
கொடுத்திருக்கலாம் வார்த்தைகளாய்!
ஆனால் பேசாமல் மௌன வலிகளாய் கொடுத்துவிட்டாயே !

நாம் சேர்ந்து நடந்த போது
மலர்தூவிய பூக்களெல்லாம்
முட்களாக குத்துகிறது பாதங்களை
தனியாக நான் நடப்பதால் !

காதல் வழியை விட கடினமானது
எதுவும் இல்லை என்று இருந்தேன்
தோழியே என்னைவிட்டு
நீ பிரியாதவரை !

நாம் இணைந்திருந்த போது
மகிழ்ந்த தருணங்களைவிட ,
அதிகமாக வருந்துகிறேன்
தோழியே நம் பிரிவு கண்டு !

அலைபேசியில் கடந்த சில மாதங்களாய்
என்னால் அழைக்கப்படாத ஒரே எண் உன்னுடையதே ........

அதே போல் எந்த ஒரு அழைப்புகளும்
வராத அழைப்பேசி எண்ணும்
உன்னுடையதே .........

தோழியே தொடர்ந்து பிராத்தனை செய்து கொண்டிருக்கிறேன்
கடவுளிடம் அல்ல !!!

என் கவலைகளை
உனக்கு தெரிவிக்கும் என்று
நான் நம்பிக்கொண்டிருக்கும்

நம்
புனிதமான நட்பின்
நினைவுகளிடம் .........

(தோழியே முடிந்தால் தொடர்பு கொள்
இல்லையேல் தொடரட்டும்
நம் நட்பு நினைவுகளில் மட்டும்...........)

எழுதியவர் : ப.rajesh (4-Jan-12, 3:55 pm)
பார்வை : 475

மேலே