நீயில்லாது....

நீ இல்லாது வாழ்வேது
நிமிடக்கணக்கே அறியாத
உன்னிடம் சோர்வேது...

ஏழ்கடலையும் தாண்டி விட்டேன்
உன்னை கண்கொண்டு கண்டிடவில்லை...

நிதானமே இல்லாமல் ஒவ்வொரு
சமயம் வருகிறாய்....

உன்னை கண்டிடவில்லை என்றாலும்
கலக்கமில்லை கண்ணில்...

உயிர் மூச்சாய் நீ வந்தால் தான் வாழ்வு...

ஒரு நொடி நீ வராவிட்டாலும்
உயிர் இறப்பேன் நீ இல்லாது

என் சுவாசக்காற்றே....

எழுதியவர் : pommu (5-Jan-12, 3:29 pm)
பார்வை : 276

மேலே