எனக்கு ரெண்டு பெத்தவங்க

வயசு வித்தியாசமில்லாம
வாட போடனு கூபுட்டு,

கனவு தீந்துபோற வரைக்கும்
கட்டிபுடுச்சு தூங்கிகிட்டு,

"நா பெத்தேனா? இவன் பெத்தானா?"ன்னு
பெத்தவளே கொலப்பிவிட்டு,

உன்கோட எப்பவு இருப்பேன்னு
சொல்லாம சொல்லிக்கிட்டு,

பேருக்குதாயா
என்ன பெத்தவங்களுக்கு
எங்கள சேத்து
ரெண்டு பசங்க,

ஆனா எனக்கு
ரெண்டு பெத்தவங்க
என் தம்பியோட சேத்து
இதுதா நெசங்க..

எழுதியவர் : எழுத தெரியாதவன் (27-Jan-12, 6:13 am)
பார்வை : 322

மேலே