என் நண்பன் போல யாரு மச்சான்
வாடி நின்ற தும்பை
செடிக்கு தன் உடல் கிழித்து
நீர் என்ற உணவை ஊட்டிய
மேகம் போல் வந்தான்
என் நண்பன்....................................
அவன் முதல் சந்திப்பு
என் இதயத்தில் பூத்த
வெற்றி என்னும் வகை பூ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உயிர் இழந்து சருகை தாங்கிய
மரக் கிளை போன்ற -என்
உதடுக்கு புன்னகை எனும்
தளிர் இலையை தந்தவன் -என்
நண்பன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
சிறு நீரில்
குறு நிலம் கொண்ட
கிணற்ற்று தவளையான -என்னை
பவளம் பெற்று பரவிகிடந்த
நீல கடலில்
எனை நீந்தச் செய்தவன்
என் நண்பன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அவன் நட்பில் ஊறிப்
போன எனக்கு
அவன் பேனா அழும்
மை கூட சுமையே,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஆனால் உடைந்த என்
இதயச் சிலேடை தாங்கிய
என் நண்பன் என்றும்
எனக்கு சுமை தங்கியே,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,இப்படிக்கு
தினேஷ் பாபு