புரிந்து கொள் மனிதர்கள் குணமே!

வீடு வரை உறவு,
வீதி வரை மனைவி;

உடல் நலமில்லை என்று
மருத்துவ மனையில் சேர்ந்தால்
நலம் விசாரிக்க வருவோர் சிலர்,
வேடிக்கை பார்க்க வருவோர் பலர்;

உற்சாகப்படுத்த சிலர்,
பலவீனப்படுத்த வேறு பலர்,
ஆப்பிள் ஆறு வாங்கி வருவர் சிலர்,
ஆர்லிக்சும் வாங்கி வருவர் பலர்;

உடனிருந்து உதவு என்றால் ஓடிடுவர் சிலர்,
பொருளுதவி என்றாலோ பறந்திடுவர் பலர்,
உறவென்பது அந்தளவே மனமே,
புரிந்து கொள் மனிதர்கள் குணமே!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jan-12, 10:03 pm)
பார்வை : 353

மேலே