மறக்கவில்லையடி.......

உன் கரம் கோர்த்து
நான் விளையாடிய
காலங்களை மறக்கவில்லையடி.....

தேர்வில் ஜெயிக்க
உனக்கென நானும் எனக்கென
நீயும் மாறி மாறி
வேண்டுதல் வைத்த
காலங்களை மறக்கவில்லையடி....

உண்டியல் காசு சேர்த்து
எனக்கென நீ வாங்கித்தந்த
முதல் முதல் பரிசினை
தொட்டு பார்க்க என்றும் மறக்கவில்லையடி....


உன் திருமண நாளில்
உன் கணவன் கரம் கோர்த்தும்
என்னை கண்டதும் ஓடி வந்து
தழுவி அழுத நிகழ்வை மறக்கவில்லையடி....

உன் மழலைக்கு என் பெயர் வைத்து
நீயம் எனக்கு உணர்த்தி விட்டாய்...

உணர்கிறேன் நீயும் என்னை
மறக்கவில்லையடி....

எழுதியவர் : (3-Feb-12, 4:42 pm)
பார்வை : 554

மேலே