சுயதொழில் செய்..! [குறட்பாக்கள்]

கற்க கசடறக் கற்றபின் தன்தொழிலில்
நிற்க சிறப்பின் நிமிர்ந்து!

கற்றதனால் ஆய பயனென்கொல்! கைகட்டி
நிற்கின் பிறர்முன்பு நீ!

கற்றாரின் நாணுடைத்தக் கல்வி ,குடியோம்பக்
குற்றேவல் ஒன்றோ குறி!

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் கைத்தொழில்
மிக்காரை ஏத்தும் உலகு!

கல்லானென் றாலும் உலகேத்தும் கைத்தொழிலில்
வெல்வானைக் கண்டு வியந்து!

காதல் சுயதொழிலாய்க் காதலி! அக்தூட்டும்
ஊதியத்தோ டான்ற உயர்வு!

ஆய்ந்தறிந்து செய்யாத் தொழிலோனும் வட்டாடிச்
சாய்ந்தழிவான் தானும் சமன் !

சென்ற இடத்தால் செலவிடாது நன்றாய்ந்தே
இட்டமுதல் கூட்டும் புகழ்!

கொள்ளற்க வேண்டாக் கடனைக் கொடுக்கற்க
கள்ளர்க்கே என்றும் கடன்!

ஈதல் இசைபட வாழ்தல் இவைகூட்டும்;
நீதொழில் செய்ய நினை!

-௦-

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (10-Feb-12, 9:34 pm)
பார்வை : 397

மேலே