காதலின் மறுபெயர்

அன்பைப்பொழியும் அம்மாவை
காதல் செய்

அரவணைக்கும் அப்பாவை
காதல் செய்

கூடி விளையாடும் உடன்பிறப்பை
காதல் செய்

உயிர் கொடுக்கும் நட்பை
காதல் செய்

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வரும்
அன்புக்கு மட்டும் பெயர் அல்ல காதல்!

ஒரு அன்னைக்கும் அவர் குழந்தைக்கும்
இடையில் இருக்கும் பாசம்
அதற்கு பெயரும் காதல் தான்!

ஒரு தந்தைக்கும் அவர் குழந்தைக்கும்
இடையில் இருக்கும் அக்கறை
அதற்கு பெயரும் காதல் தான்!

ஆகவே காதலர் தினத்தை
எல்லோரும் கொண்டாடுங்கள்
உங்கள் மீது பாசம் கொண்ட
அனைத்து உறவுகளுடனும்!

காதலின் மறுபெயர் அன்பு...
அன்பின் மறுபெயர் காதல்...

எழுதியவர் : minminy (10-Feb-12, 9:42 pm)
பார்வை : 803

மேலே