கவி காதலன்!!!

காதல் உன்னுள் நுழைந்து விட்டால்
கற்பனை ஊற்றெடுக்கும்..
கவிதைகள் ஆறாகும் என
என் ஆருயிர் நண்பன் சொன்னான்...

காதல் இல்லை எனினும் என்னால்
கவி திரட்ட முடிகிறதே...
பொய் சொன்னானோ நண்பன்? - என
நான் சிந்தித்து இருக்க,

பின்பு தான் உணர்ந்தேன்,
நான் காதலிப்பது கவிதையை தானென்று!!
ஆம் !!
காதல் கவி செய்யும்... உண்மை தான்....

நான் கவி காதலன்....!!!

எழுதியவர் : கவி மணி (17-Feb-12, 2:32 pm)
பார்வை : 210

மேலே