120 -- கண்ணீரோ காக்கும் சுதந்திரத்தை..!
மொழிகளைக் காட்டிக்
கவிதைகள் எழுதி
மனித
விழிகளில் விசனத்தை
எழுதுபவர் யார்?
வார்த்தைகளால்
தாலாட்டுப் பாடி
வாயாடாமல் பிள்ளைகளை
உறங்கவைப்பவர் யார்?
உனது விரல்களை
உனக்குச் சூப்பக்
கொடுத்துவிட்டு
உனது வயதுகளைத்
திருடிச் செல்வது யார்?
படுத்துக் கொண்டே பாடும்
கடலா நீ?
தேர்தல் வெயிலை எடுத்து
உடுத்திக் கொண்டதும் உருகும்
பனிமலையா நீ?
நேர்வு செய்யப் போகிறாயா?
அல்லது
தேர்வு செய்யப் போகிறாயா?
நினை! முனை! முடி!
தண்ணீரும் விலைபோகும் நாட்களில்
கண்ணீரா உன் சுதந்திரத்தைக்
காக்கப் போவது?
எழு! எடு! அடி!
-௦-