மனைவி..
என் முகப்புத்தகத்தின் முதல் பக்கத்தில்..
என் இதயவளின் மனம் குளிர..
சில வரிகள்..
....
காதல் வயதும், காதலும் - என்னை,
படர்ந்தும், கடந்தும் விட்டன..!! எனினும்,
வயதும், வாழ்க்கையும் - என்றும்,
தொடர்கின்றன..!!!
பகிர்தலும், புரிதலும் - உறவுகளின் உயிர் எனில்,
தினம் தோறும் இரண்டும் ஒருசேர,
இல்லாளின் இதயம் தவிர வேறேது..!!
காதல் தேடலில் உச்சபட்ச
இன்பமே இது தவிர வேறேது...!!
என்னை சுற்றி வரும் துணை என..
இருவரும் உணர்கையில்..
நொடிப்பொழுதில் நொறுங்கும் அந்த -- 'நான்'..!!!
ஊடலின் பொருட்டு வழியும் கண்ணீர்..
துடைக்கும் என் கை, விலக்கும் அவளது கை..!!
இவை விளக்கும், அது
பின் வரும் கூடல்..!!!
கூடல் சுகம் எனில், - அதன் முன் ஊடலும்.!!!
என்ன சொல்ல..
காதலிக்க காதலி தான் வேண்டுமோ ..?
மனைவியை மறுப்பதற்கில்லை..!!!