பயணம் செல்வோம்
நீண்ட இரவு
விடியலுக்கான பயணம் -
நீயும் நானும்
இன்னும் சிறிது
பயணம் செல்வோம்...
நெடிய துன்பம்
இன்பத்திற்கான தவம் -
நீயும் நானும்
இன்னும் சிறிது
தவம் செய்வோம்...
நெஞ்சின் சோகம்
நேசத்திற்கான தேடல் -
நீயும் நானும்
இன்னும் சிறிது
தேடல் கொள்வோம்...
நிலையில்லாத வாழ்க்கை
நிலப்பதற்கான முயற்சி -
நீயும் நானும்
இன்னும் சிறிது
முயற்சி செய்வோம்...