!!! உள்ளம் என்ன எந்திரமா? !!!

உள்ளம் என்ன எந்திரமா?
உண்மை வெல்லும் நாள்வருமா?
கண்கள் கண்டு
தீ வளர்த்த
காதல் நோய்தான் தீர்ந்திடுமா...???

பள்ளம் உள்ள வழிதடமா?
பார்க்க கண்கள் மறந்திடுமா?
பாதையோரம்
உன் நினைவு
பாவி என்னை கொல்லுதம்மா...

காதல் என்ன போர்க்களமா?
கண்கள் என்ன ஆயுதமா?
பார்வை கொண்டு
தாக்கியதால்
பிஞ்சு நெஞ்சு வேகுதம்மா...

உறக்கம் தொலைந்து போனதம்மா
உயிரும் உருகி வாடுதம்மா
உன்பெயர் சொல்லி
நானழைத்த
ஓசையும் காற்றில் கரையுதம்மா...

ஒவ்வொரு நாளும் விடியுதம்மா
விழிகள் ரெண்டும் தேடுதம்மா
உனக்காய் பூத்த
பூக்களெல்லாம்
சருகாய் காற்றில் ஓடுதம்மா...

மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
என் மௌனத்திலும் - உன்
நினைவுத்தொல்லை...

நாம் வாழ்ந்ததெல்லாம்
ஒரு காலமடி - அதன்
நினைவுகள் மட்டும் போதுமடி...

ஒருமுறை சொல்லிவிடு
நான் சாகிறேன்
உன் வீட்டில் நீ வாழ
விரகாகிறேன்...

இறக்கும் முன்பே
எரியும் முன்பே
இதயம் இருந்தால் வந்துவிடு
என்னை என்னிடம் தந்துவிடு...!!!

குறிப்பு:. கவிஞர்கள் ஒரு பொருளை பல கோணத்தில் பார்ப்பதுண்டு காதலையும்கூட அப்படித்தான், நானும் ஒரு கோணத்தில் நின்று காதலை பார்த்து எழுதினேன் அவ்வளவுதான்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (5-Mar-12, 3:06 pm)
பார்வை : 204

மேலே