உலகப் பொது மொழி...

காதல் சொல்ல ஒரு மொழி
கவிதை சொல்ல ஒரு மொழி
அன்பை சொல்ல ஒரு மொழி
இயற்கையின் கவி மொழி
இறைவன் வரைந்த வண்ண மொழி
அவன் எண்ணம் போல் மணக்கும் மொழி
நாளும் பூக்கும் புது மொழி
நன்றி சொல்ல ஒரு மொழி
நானும், நீயும் நட்பாக ஒரு மொழி
அன்பை,அஞ்சலியை
அர்பணிக்க ஒரு மொழி
அழகான வண்ண மொழி
யாரும் கண்டு மலரும் மொழி
யாவரும் கொண்டு மயங்கும் மொழி
மண் மணக்கும், மனம் மயக்கும் ஒரு மொழி
உலகின் பொது மொழி
எல்லோரும் அறிந்த மொழி -அது
என்றும் பூக்கும் வண்ண மொழி
....... ...... ...... .... ..... பூக்கள்!!!