கடலில் கணத்த மனதுடன் நான்

கதிரவன் உதயலில்
கடற்கரையில் நான்
கண்ட காட்சி உங்களது
கண்ணிற்கும் சிந்தனைக்கும்.........
இரவு கரைகிறது
பகல் வளர்கிறது
கைபேசி அழைப்பு
கண்விழித்து பார்த்தால் மணி 5 .00
பல்விலக்கி முகம் கழுவி முடிப்பதற்குள்
பள்ளிவாசலில் பாங்கு சப்தம் ..
பள்ளிக்கு சென்று நாமாஸ் முடித்து
நடைபயிற்ச்சிக்கு கால்கள் கடற்கரை
நோக்கி பயணித்தது ...

அழகான மெரினாவில்
இதமான காற்று
அமைதியான சுழல்
அலைகளின் ஆடல் பாடல்
மனச்சுமைகள் காற்றோடு பறந்தது ஆனால்
அங்கே கண்ட நிகழ்வுகளால்
மனம் துண்டு துண்டாக ஆனது

சாமி ஊர்வலம் முடித்தோ, தொடங்கவோ ஆக மொத்தம்
பூஜைக்காக கடலுக்கு அருகில் பூஜை நடக்கிறது
சாமி அலங்கரித்து தேரில் உள்ளே உள்ளது ....
பக்தர்கள் எல்லோரும்
கடலையும் கதிரவனையும் கும்பிடுகிறகள்
.தண்ணீரை தீர்த்தமாக தலையில் உடம்பில் தொளிக்கிரார்கள்
ஐயர் மந்திரம் சொல்கிறார்கள்
வந்த நடைவாசிகளும்
மரியாதை செலித்திவிட்டு செல்கிறார்கள்

ஆனால்
அதற்கு வலப்பக்கம் இடப்பக்கம்
பத்தடிக்குள் ...........
ஆறரிவு படைத்த ஏழாம்
அறிவை தேடி போகும்
அரை அறிவு கூட இல்லாத
மனிதன் ///
இருட்டறையில்
இருவர் மட்டும்
ஈரெண்டு அறையில்
நிகழும் நிகழ்வை அரங்கேற்றமாக
நடந்து கொண்டு இருக்கிறது
தாய் தகப்பன் சொந்தம் பந்தம் முன் செய்வார்களா ஆனால்
சாமி முன்னாடி நடத்துகிறார்கள் கலிஉலக காதலர்கள்
சாமி மீது நம்பிக்கை இல்லையா ?சமுதாயம் மீது மரியாதை இல்லையா ?

கதிரவனை பார்த்து வணங்குகிறார்கள் பக்தர்கள் ......
கதிரவனை பார்த்துக்ககொண்டே
களியாட்டம் நடத்துகிறார்கள் காதலர்கள்..........

கடல் நீரை தீர்த்தமாகவும்
கடலை கடல்தேவியாக நினைக்கிறார்கள் பக்தர்கள்
காலைக்கடனை கடலிலே
கழித்து கழுவி கண்ணியமின்றி நடத்துகிறார்கள் அப்பகுதி மக்கள்

கடவுள்தான் மனிதனை படைத்தான்
மனிதன் கடவுளிடம்தான் கேட்கவேண்டும்
மனிதனிடம் எதையும் கடவுள் கேட்கவில்லை
ஆனால் அங்கே பூஜையில்
அத்தனை பொருட்கள்

இதயெல்லாம் பார்த்து புரியாத புதிராக
வீட்டல் வந்து கணணி வழியாக உங்களிடம் பகிர்றேன்.....


நன்றி உங்களின் மேலான கருத்துகளை பகிந்து கொள்ளுங்கள்

தபரேஜ்

எழுதியவர் : தபரேஜ் (8-Mar-12, 4:06 pm)
சேர்த்தது : thabrej
பார்வை : 171

மேலே