நல்ல நட்பு..!!
நட்பென்றால் நட்போடு
தவறோ சரியோ விருப்போ வெறுப்போ...
எதையும் பேசவேண்டும்..
நட்பென்றால் நட்பிற்கு
உனக்கு வேண்டுவன வேண்டாதன பாராமல்
நன்மைதரும் எல்லாமும் செய்யவேண்டும்..
நட்பென்றால் நட்புகொண்டோருடன்
வெற்றியிலும் தோல்வியிலும்
துன்பதில்லும் இன்பத்திலும்
இறுதிவரை இருக்க வேண்டும்..
நட்பென்றால் நட்பான உயிரோடு
ஆசை கோபம் அன்பு நேசம் அனைத்திலும்
உணர்வாக கலக்கவேண்டும்..