நட்பும் காதலும்

நட்பு வாழ்வில் வரும் இன்பம்
காதல் வாழ்வில் தரும் துன்பம்

நட்பு காண முடியாத தொடக்கம்
காதல் காண முடியாத முடிவு

நட்பு நம்முடன் இருக்கும் நிஜம்
காதல் நம்முடன் இருக்கும் நிழல்

நட்பு கண்களுக்கு புலப்படும் பகல்
காதல் கண்களுக்கு புலப்படாத இரவு

நட்பு உன்னிடம் பேசும் உண்மை
காதல் உன்னிடம் பேசும் பொய்

நட்பு அன்பை அமிர்தமாக்கும்
காதல் அளவு மீறினால்
அமிர்த அன்பை நஞ்சாகும்

ஒன்றாக இருந்து
உணர்வுகளை வேறுபடுத்தும்
நட்பும் காதலும்




எழுதியவர் : கவிஞர் :ஜெ .மகேஷ் (14-Mar-12, 9:21 pm)
Tanglish : natbum kaathalum
பார்வை : 574

மேலே