கொட்டிக் கொடுக்க வேண்டாம்..!!

கொட்டிக் கொடுங்களென்றா கேட்டோம்
கொஞ்சம் விட்டுக்கொடுங்கள்
என்றுதானே கேட்கிறோம்
குடிக்கவும் பயிர்வளர்க்கவும்
தண்ணீருக்காக தவிக்கிறோம்
தொழிலிலும் இருளிலும்
மின்சாரமின்றி மிரலுகிறோம்
குந்தக் குடிசையின்றி
அகதிகளாக அலைகிறோம்
கொட்டிக் கொடுக்க வேண்டாம்
கொஞ்சம் விட்டுக்கொடுக்களேன்
மனசாட்சியுள்ள மனிதர்களே..!!

எழுதியவர் : சீர்காழி. சேது சபா (16-Mar-12, 4:17 am)
பார்வை : 253

மேலே