பட்டாம்பூச்சியாய் பறக்க ஆசை...

வாழவும் முடியாமல்...
வாழ்ந்தும் தொலைக்காமல் ...
மற்றவர்களுக்கு பயந்து
வாழ்க்கையை வீண் செய்து
நாளை விடியும் என்ற கனவோடு
நாட்களை கடத்துவதை விட...

வாழ்வில் விடியலலுண்டோ?
இறைவா நீயெங்கே!
என்று எண்ணி ஏங்குவதை விட...

கொஞ்ச நேரமேனும்
சுதந்திரமாய்
பட்டாம்பூச்சியாய் வாழ்ந்து
பறக்க ஆசை...

எழுதியவர் : சித்து (17-Mar-12, 12:38 am)
பார்வை : 256

மேலே