"குப்பைத்தொட்டி கொலைகள்"
![](https://eluthu.com/images/loading.gif)
ஐயோ.... எரியுதே........!!!
உயிர் கருகுதே....!
இருட்டு கூடத்தில்- நடந்த
திருட்டு கூடலில்
தேவையின்றி வந்த தீட்டா...?
நான்....?
அம்மா சாயலா...? அப்பன் சாயலா...?
பார்த்து சொல்ல யாரும் வந்தால்
பத்தினி தனம்,
பாதிக்க படும் என்பதால் தானோ....?
அறுந்த தொப்புள் கொடி
வலி மரத்து போவதற்குள்
அனாதையாய் கொன்று போட்டாயோ...?
நீயும் பெண்தானா.............?
தெரு நாய் கவ்வ போட்ட
தாய் பாசம் என்னே......!
ரசக்குளியலில் நனைந்து
காயப்பட்டு எரியுதடி....
காயாத தொப்புள் கொடி...
காரக்குழம்பு பட்டு
என் மேனி கருகி போனதடி
காரம் நெருப்பாய் சுட்டு..;
எங்கே.............?
உன் படுக்கைக்கு விருந்தாளி
எதிர்வீட்டு குளியல் அறைக்கு
குடிமாறி போனானோ....?!
பக்கத்து விட்டுக்காரன்
படுக்கை எச்சிலை
பந்தி போட்டு தின்னவனை
அப்பன் என சொல்வதை விட
அடித்தொண்டை அடைத்து
சாவது பெரும் பாக்கியம்..;
சாகக்கிடக்கும் எனக்கு
கடைசியாய் பாலுட்ட(த்த)
மனமில்லையா...?
இறுதி வினாடிகளை
எண்ணிகொண்டிருக்கிறேன்;
எவனோ... போட்ட
எச்சிலையே.... கோடி துணியாக.....
எச்சகலைக்கு பிறந்ததால்....
திருட்டு நாய்களே.....
உங்கள் கழிவு உண்ணும்
காம பசிக்கு
கசாப்பு கடை ஆடானேனே...?!?
"நாய்கள் இனம் மன்னிக்க வேண்டும்"
என்ன பார்க்கிறாய்.....?
அம்மா என்று உன்னை
அழைப்பதை விட
கொடும் பாவம் வேறேதும் இல்லை
நான் செய்ய இப்பிறவியில்....
கள்ள காதல்- கழிவு சமையல்