எங்கே நிம்மதி
பூவின் பிறப்பிலா...
உன் புன்னகையின்
தொடக்கத்திலா....
தெரியவில்லை...
அன்பே !
கோடி கோடியாய்
பாசம் இருந்தும்
குமறுகிறதே...
என் உள் மனம் !
தேடி தேடி
அலைகின்றேன் - என்
தேவதையின் தரிசனத்தை...
பூத்திருக்கும் விடியல்
என்னை வந்து
சேராதா...!
பூ நெஞ்சம் - அவள்
புன்னகையில் தவழதா....!
துன்பம் என்னை
விட்டு நீங்கவில்லை...
இன்பம் என்னை
ஏறெடெத்து பார்க்கவில்லை...
கானப்பொழுதில்
கானங்கள்
கேட்டதுண்டா....
உன் கார்மேக
கூந்தலில் - நான்
அளித்த ரோஜா
பூத்ததுண்டா....
பாரினில் பார்த்ததில்லை
உன் போல் அழகியை...
பாவை மனசு
கேட்கவில்லை...
நீண்ட நாள்
உறக்கமில்லை....
நினைவுகளுக்கு
பஞ்சம் இல்லை....
சாலையில் நடந்தாலே
சட்டென்று - உன்
முகம் தெரியுது
சோலைக்கு சென்றாலே
சொந்தமென்று
பூக்கள் கூப்பிடுது...
நிம்மதியை தேடி
நித்தமும் தவிக்கிறேன்...
சத்தமில்லாத - உன்
வார்த்தைக்கு
சாத்திரங்களும்
பொய்யாகும்....
என் காதல் பொய்யாகுமோ?
வான் வெளியில்
வெளிச்சமில்லை....
வருகின்ற தென்றலில்
சுவாசமில்லை....
பூத்திடும் புன்னகையால்
இதயத்தில் பூத்தவளே....
நிரந்தமாக கண்மூடும்
முன்பே - என்
இதயத்தை சேரடி....
நிலைகுலைந்து
நிற்கின்ற நிம்மதியை
தருவியாடி....