பெண்ணே நீ இன்றி இந்த உலகம் தான் ஏது..

பெண்ணே நீ இன்றி இந்த உலகம் ஏது..
இந்த உலக வட்டத்தில் உண்மை தெய்வம் நீ
அன்னையாக !!
அன்பை அடித்து காட்டுவாய் தங்கையாக !
துயரத்தின் போது தோல்தருவாய் தோழியாக !
காதலை கற்று கொடுப்பாய்
உன் கண் விழியில்- கன்னியாக !
உன்னையே அடைமானம் வைக்கிறாய் மனைவியாக !...
உனக்காக நாங்கள் என்ன செய்தோம் !
என்ன செய்தல் உனக்கு ஈடாகும் !.????..............
கோடி நன்றிகள் உரைத்தாலும் ஈடாகுமா??????????
மாற்றான் பிள்ளைக்கு பசி தீர்க்கும் உந்தன் தாய்மை !
காதலை மறக்காத உன் தன்மை !
கணவனை மீறாத உன் பெண்மை !
எத்தனையோ உள்ளது உன் பெருமை !!
என்ன சொல்ல !!!!!........... பெண்ணே நீ இன்றி இந்த உலகம் உண்டா??
இல்லை இல்லை !!
அப்படி ஒரு உலகம் இருந்தால் அது பேய்கள்
வாழும் சுடுகாடு !!!!!
பெண்ணே உமக்கு நன்றி ! உன் பிறப்புக்கு நன்றி !
நீ இன்றி நாங்கள் ஏது!!!! ?????...
- இரா . அறிவுக்கரசு .