கொங்கு நாட்டு நாட்டுப் புறக் கதை

ஒரு கிளவிக்கு மூனு புள்ளைக. மூனுபேருக்கும் கல்யாணம் பண்டி வச்சா.மூனு மருமகளையும் வேலை அதிகமா வாங்கி கொடுமப் படுத்தினா. மருமக மூனுபேரைம் ஊருக்குப் போகக்கூட விடாம வேலை வாங்கினா.
தைமாசம், காடு வெள்ளாமஅறுப்பு வேலை வந்துடுச்சு. காட்டுல கம்பு போட்டுருந்தா கிளவி. மூனு மருமகளையும் கம்மங்கருது அறுக்க அனுப்புனா. காலைல நேரத்துலையே காட்டுக்கு அனுப்பிடுவா. அவங்க மூனு பேரும் வேளைக்கு ஒருக்கா மட்டும் தான் சாப்பிடனும், சாப்பிட்ட உடனே தாம்பூலம் போட்டுக்கனும், ஒரு கம்பு, சோளம் கூடத்தின்னக்கூடாது.
அப்படித்தான் ஒரு நாள் கம்பு தின்ன ஆசைப்பட்டு மூனு பேரும் கம்ப தேச்சு தின்னுபோட்டாங்க. மத்தியானம் மாமியா சோறு ஆக்கி கொண்டுவந்தா. மூனுபேரும் தண்ணியக் குடுச்சுட்டு கொஞ்மா சாப்புட்டாங்க. இவங்க கம்பு திண்ணத மாமியா கண்டுபுடுச்சுட்டா.
அவங்ககிட்ட ஏன் சோறு கம்மியா திண்ணீங்கனு கேக்க, அவங்க இன்னிக்கு பசி இல்லைனு சொன்னாங்க. அதுக்கு மாமியா, ஓ... ஒ அப்படியா, எனக்குத் தெரியாதா? யேம்பசியில்லைனு, கம்ப வயிரு நம்ப திண்ணமாரி இருக்கு, திண்ணா போச்சாது, இனி திண்ணவேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டா. அப்புறம் பொழுதா வரைக்கும் கருது அறுத்துட்டு வீட்டுக்கு வந்ததையும் அம்பா ராட்டை வச்சு வெடிய வெடிய நூல் நூக்கனும்,இப்படியே அவங்க பொளப்பு போச்சு.
ஒரு நாள் ஒரு மருமகளேடபொறந்தவன் வந்தான். அவனும் பொறந்தவள காட்டுல போயித்தான் பார்க்க முடுஞ்சுது. கம்மங்காட்டுல தான் பார்த்துப் பேசினான். எல்லாம் பேசி முடுச்சுட்டு கடசீல, ஏஅம்மணி ஊருப்பக்கமே வராம இருக்க, அப்படினுபொறந்தவன் கேட்டான். அதுக்கு இவ, நான் எங்கண்ணா வரது, இங்க தூங்கி எழுந்தா கம்மங்காட்டுக்கு வந்தரனும், சாயிங்காலம் வூடு போனா ராட்ட வச்சு வெடிய வெடிய நூல் நூக்கனும், இப்படி இருக்கு எங்க போளப்புனு மூக்க சிந்தி அழுதா. பொறந்தவன், ஓஹொ அப்படியா சமாச்சாரம், இதுக்கு ஒரு வழி பண்டாம விடக்கூடாதுனுசொல்லிட்டு, பொறந்தவ கிட்டையும், மத்த இரண்டு பேருகிட்டேயும் சொல்லிட்டு, நான் நாளைக்கு ராத்திரி நாலுபேராட வந்து, இதுக்கு ஒரு முடிவு கட்டுரேனு சோல்லிட்டு, போயிட்டுவாரேனு புறப்புட்டான்.
ஒரு நாலு நாள் கழிச்சு, ராத்திரி நூல் நூக்கும் போது, சாமம் இருக்கும். அப்பே வூட்டுக்கு பின்னாடி உடுக்கை அடிக்குர சத்தம் கேட்டுது, கூடவே
நூலு நூக்கிய தூக்கட்டுமா
நூக்கு நூக்கிய தூக்கட்டுமா
பஞ்சு நூக்கிய தூக்கட்டுமா
பஞ்சக்காலத் தூக்கட்டுமா
னு பாட்டுச் சத்தமும் உடுக்கைச் சத்தமும் கேட்டுச்சு. மாமியா, உடனே அடடா என்னமே சத்தம் கேக்குது, என்னனு பார்க்கலாம், நூக்கரத நிருத்துங்கனு சொன்னா.ஒரு சத்தத்தையும் காணோம். மாமியா, ம்.. ம்.. ஒன்னையும் காணோம்,ராட்டைய சுத்துங்கோனா.இவங்களும் பர்ரு பர்ருனு நூக்க ஆரம்பிச்சாங்க. உடனே வீட்டுக்கு பின்னாடி இருந்து
பொன்னக்கா மாமியால தூக்கட்டுமா
கண்ணக்கா மாமியால தூக்கட்டுமா
சின்னக்கா மாமியால தூக்கட்டுமா
பெரியக்கா மாமியால தூக்கட்டுமா
னு பாட்டுச் சத்தமும் உடுக்கைச் சத்தமும் மறுபடியும் கேட்டுச்சு. மாமியா, அடடா, நிருத்துங்கோ நிருத்துங்கோ எவனே மாமியாள தூக்கரனு பாடுர, என்னனு பார்க்கலானு நூக்குரதநிருத்தச் சோன்னா. நூக்கரத இவங்க நிருத்தினா, அவங்களும் பாடரத நிருத்திரது. இவங்க ஆரம்புச்சா அவங்களும்உடுக்கை அடிக்க ஆரம்பிப்பாங்க. இப்படியே நாலுதடவ நடந்துச்சு, மாமியாலுக்கு பயம் வந்துடுச்சு. அள்ளே அள்ளே எவனே வந்து தூக்குர தூக்குரனு பாடுரா, நீங்க நூலும் நூக்கவும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம், எல்லாமையும் எடுத்து வச்சுட்டு போயித்தூங்குங்கனு சோல்லிட்டா. மறுநாள்ள இருந்து ராத்திரி நூல் நூக்குர வேலை வேண்டாம்னு சொல்லிட்டாலாம். அப்புறம் மூனுபேரும் சந்தோசமா இருந்தங்களாம்.

எழுதியவர் : (11-Apr-12, 5:58 am)
பார்வை : 825

மேலே