நீலவான மழை

இன்று பெய்த மழையை யாரும்
எதிர்நோக்கியிருக்கவில்லை
நடுச்சாமத்தில் பெய்வதற்காக
திரண்டிருந்த மேகத்தின் கருமையை
குட்டையில் தேங்கியிருந்த நீர்
சுமந்திருந்தது
இன்னும் கொஞ்சம் சீக்கிரமாய்
கிளம்பியிருந்தால்
நீலவானத்தின் வர்ணத்தை
நீரில் ரசித்திருக்கலாம்

எழுதியவர் : வே.முத்துக்குமார் (18-Apr-12, 4:47 pm)
சேர்த்தது : narpavi2004
பார்வை : 212

மேலே