நண்பர் திரு.ரெளத்திரனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்! - ராஜேஸ் நன்னிலம் கட்டுரைக்கு மறுப்புக் கருத்து
நம் கையில் அற்புதக்கனியின் விதையுள்ளது. வித்திடும்போதே விருட்சத்தில் காக்கை அமருமோ? கழுகு அமருமோ? என்ற வாதம் எதற்கு?...
நல்லது நாடும் எண்ணங்களை நாளும் வளர்ப்போம்.
வெற்றி நிச்சயம்.
“ரௌத்திரன்” ஒன்றும் கத்துக்குட்டியில்லை, ஒன்றும் அறியாத பாமரனில்லை. நாளைய நன்மைக்கு எண்ணங்கள் தூவும் இவர் போன்றோர்களின் வரிகள்தான் இன்றைய தேவை.
எதிர்மாறையான வார்த்தைகளை, நம்பிக்கையிழக்க செய்யும் வரிகளை ஏன் பரப்ப வேண்டும்? ஊக்கப்படுத்த வேண்டாம், இதுபோல் வலுவிழந்த எண்ணங்களைக்கூறாமல் இருக்கலாமே.
உங்களால் முடிந்தால் கைகோர்க்க வாருங்கள், முடியாவிட்டால் ஓரமாய் அமர்ந்து வேடிக்கை பாருங்கள். இப்படி வழியில் விளக்கெண்ணெயைக் கொட்டாதீர்கள், அதில் நீங்களே வழுக்கி விழுவீர்கள்.
யாரும் எனக்கு துணையில்லை, எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்.
நான் உப்பு விற்கப்போனால் மழைபொய்கிறது, பஞ்சு விற்க போனால் காற்றடிக்கிறது. நான் என்ன செய்வேன்? என்று பாமரன்போல் புலம்பிக்கொண்டிருந்தால், நன்மை எதுவும் வராது.
“மகாத்மா காந்தி” அன்று நான் தனியாள் என்று நினைத்திருந்தால், சுதந்திரப்போராட்டம் உயிர்பெற்றிருக்காது.
நம் எண்ணத்தின் மீதும், செயல் மீதும் நம்பிக்கைவைத்து செயல்பட்டால் நன்மை உறுதி.
உலகில் உங்களைத்தவிர எல்லோருமே கெட்டவர்கள்?... அப்படியிருந்தாலும், உங்கள் நல்ல கருத்தை ஒருவரிடமாவது சொல்லுங்கள். என்றேனும் ஒருநாள் அது அவனை நல்வழிப்படுத்தும்.
எல்லாமும் உடனடியாக நடந்துவிடாது, அது அதற்கான சரியான தருணம் வரும், அதுவரை காத்திருந்து, அதனை செயல்படுத்த வேண்டும்.
சரியான நோக்கோடு தொடங்கப்பட்ட செயல், நிச்சயம் பயன் தரும்.
முடியுமென்றால், மலையையும் உடைத்து வழிசெய்ய முடியும்.
முடியாதென்றால், ஒரு ஊசியைக்கூட எடுத்து ஓரம்வைக்க முடியாது.
எமது எண்ணங்கள் இன்று நாண்கடிதான் பாயுமென்றால், பாயட்டும்…
“யாதுமூரே யாவரும் கேளீர், தீதும் நன்றும் பிறர்தர வாரா”
“நம் நல்ல எண்ணங்கள்தான் நம்மை வாழ்விக்கும்.
நம் நல்ல செயல்கள்தான் நமக்கு நல்வழி அமைக்கும்”
“ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா,
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா”
“உள்ளத்தில் தெளிவோடு, உறுதியான மனதோடு போராடுவோம்.
நிச்சயம் நமது நல்ல எண்ணங்கள் வெல்லும்”
என்றும் அன்புடன்,
எழுத்து சூறாவளி