"வலி மிகும் காலம்"

சாப்பிடும் போதும்..
தொலைகாட்சி பார்க்கும் போதும்...
தினந்தோறும் .....
அவளுடைய ஞாபகம் வந்துவிடுகிறது
எல்லோருக்கும்.

அவளுக்குப் பிடித்த பாடல்களை
வரி மாற்றியோ...
ச்ருதி தப்பியோ....யார் பாடினாலும்
அசாத்திய கோபம்
வந்துவிடும் அவளுக்கு.

ரொம்பவும் "ஒல்லி"யாய் இருக்கும்
என்னைப் பார்க்கும் போதெல்லாம்...
"சீக்கிரம் உனக்கு சங்குதான்"..என்பாள்.....
உள்ளார்ந்த வருத்தத்துடன்.

இப்போதும் நிழலாடுகிறது....
மின்வெட்டு நேரத்தில்
அந்தத் துறை சார்ந்தோரை
அவள் திட்டும் திட்டுக்கள்.

அவளை நினைவுறுத்தும் எல்லாம்...
ஞாபகங்களின் வலியாய்
எங்களுடனே இருக்கின்றன.

என்றாலும்....
செத்துப் போனவளுடனேயே...
நம் எல்லோராலும்...
செத்து போய் விடமுடிகிறதா...என்ன?

எழுதியவர் : rameshalam (4-May-12, 7:34 pm)
பார்வை : 231

மேலே